Tags : political news

Latest News News politics

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு! முதல்வர் மு

அண்மையில் வழக்கு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டிய விதி இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டபோது காஞ்சி மட இளைய பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம், தேசிய கீதம் இசைக்கப்படும்போது […]Read More

Latest News News politics Tamilnadu

ரே‌ஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் ..நாளை முதல் டோக்கன்!

கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நாளை (11-ந் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் […]Read More

Latest News News politics Tamilnadu

தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? – முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சமீபமாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் 11 மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தற்போது […]Read More

Latest News News politics

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் !

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தமிழகத்தில் கடந்த கடந்த மே 10 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கடந்த மே 31 ல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் […]Read More

Latest News News politics

EXCLUSIVE: கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை! படங்கள் தொகுப்பு….

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, திமுகவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் பொருளாளரும், மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர். பாலு, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்நது, கலைஞர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் 38,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை […]Read More

Latest News News Tamilnadu

மீண்டும் ஊரடங்கா !என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் உடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் உடன் உள்ள ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிக்கை வெளியிடுவார் […]Read More

Latest News politics

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் […]Read More

Latest News News politics

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !