Tags : Nayanthara

cinema Indian cinema Latest News News

காத்து வாக்குல ரெண்டு காதல்! படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்திய படக்குழு 80 சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் தடைபட்டதால் படக்குழு சென்னை திரும்பியது. தற்போது கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல தணிந்து […]Read More

cinema Latest News News Tamil cinema

ஷாருக்கான் ஜோடியாகும் நயன்தாரா? – ட்விட்டர் ட்ரெண்டிங்!

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கான், அட்லி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருந்தது. […]Read More

cinema Latest News News Tamil cinema

பல கோடிக்கு ஓடிடி-யில் விற்கப்பட்ட நயன்தாரா படம்!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற […]Read More

cinema Latest News News Tamil cinema

தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா! எங்கு? எதற்கு தெரியுமா ?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அவ்வப்போது வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் தனி விமானத்தில் கொச்சிக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கொச்சி விமான நிலையத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் இருந்து இறங்கி வரும் புகைப்படங்கள் மற்றும் காரை நோக்கி செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

சித்ஸ்ரீராம் காந்தக்குரலில் ‘இதுவும் கடந்து போகும்’: ‘நெற்றிக்கண்’ சிங்கிள் ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த பாடல் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை காந்தக்குரலோன் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் நீதா என்பவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் மெலடியாக அமைந்துள்ள இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே சூப்பராக இருப்பதாகவும் […]Read More

cinema Latest News News Tamil cinema

நயன்தாராவின் “நெற்றிக்கண்” பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது. நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடலான “இதுவும் கடந்து போகும்” பாடல் வருகிற ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம் […]Read More

cinema Latest News News Tamil cinema

ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்!என்னயென்ன தெரியுமா ?

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் […]Read More

cinema Latest News Tamil cinema

’நெற்றிக்கண்’ – விக்னேஷ் சிவன் கொடுத்த அப்டேட் !

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது. ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு […]Read More

cinema Latest News Tamil cinema

இனி யாருடனும் நடிக்கப்போவதில்லை – நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் […]Read More

cinema Gossip Latest News Tamil cinema

ஹைதராபாத்துக்கு ஹாய் சொன்ன நயன்தாரா!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !