Tag Archives: natural news

தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஊட்டியில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது. மற்ற பகுதிகளில் வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிரகணம் விலகியதும், முழுமையாக சூரியனை பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுகிறது. […]

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, தேனி,  திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் […]

டெல்லி போன்று தமிழகத்தில் சென்னையில் காற்று மாசு!?

திருச்சி ஜங்ஷன் கலையரங்க வளாகத்தில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், காற்று மாசு குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து கவனித்து வருவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 9 ஆயிரத்து 940 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திறந்து கிடக்கும் சாலையோர கிணறுகள் மற்றும் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மழை..

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையால் கெலவரப்பள்ளி […]

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 […]

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி […]

50 அடியை தொட்டது மேட்டூர் அணை!

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடங்கி பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 நாட்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் 14 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.18 அடியாக இருந்தது. தற்போது 10 ஆயிரம் கனஅடி  நீர் தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று காலை […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரித்தது

ர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல்களை விதிக்கப்பட்ட தடை […]

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news