Tag Archives: nadikar sangam

நடிகர் ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

நீதிபதியை நிர்பந்தம் செய்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நடிகர் ஐசரி கணேஷ், தனது வழக்கறிஞருடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மையத்திற்கு பாதுகாப்பு கேட்ட விஷாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கூடாது என்று ஐசரி கணேஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் அனந்தராமன் என்பவர் தனக்கு கோரிக்கை வைத்ததாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார். நேரிலும், தொலைப்பேசி வாயிலாகவும் அனந்தராமன் தன்னை அணுகியதாகத் தெரிவித்த நீதிபதி, இருவர் மீதும் தாமாக […]

இயக்குநர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கானத் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரிய வழக்குத் தள்ளுபடி!!

இயக்குநர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 21ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியான, வழக்கறிஞர் செந்தில்நாதன் அறிவித்தார். இந்நிலையில், தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி, இயக்குநர் ஜெகநாத் என்கிற கே.பி.ஜெகன் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் கடந்த 17ஆம் தேதி மனு அளித்தார். தனது மனுவை பரிசீலித்து, தேர்தல் அதிகாரியை மாற்ற தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, […]

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க உறுப்பினர்கள் 10 பேர் தங்களையும் வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக நடிகர் சங்கம் 12ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி அளிக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை […]

இனிதே நிறைவு பெற்ற நடிகர் சங்க தேர்தல்

நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர் சங்கத் தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்தது. 3171 பேர் வாக்களிக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு இணை ஆணையர் தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், திரையுலக மற்றும் நாடக நட்சத்திரங்கள் தங்களது வாக்குகளை செலுத்தத் தொடங்கினர். பின் தேர்தல் 5 மணிக்கு நிறைவு பெற்றதை ஒட்டி, வாக்குப்பெட்டிகள், சீல் […]

‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’ – நடிகர் விஷால்

நடிகர் சங்கம் தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பின் நாசர் பேட்டியளித்தார். அதில், “நடிகர் சங்க தேர்தலுக்காக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]

நடிகர் சங்க தேர்தலை நடத்த உத்தரவு!!

நடிகர் சங்க தேர்தலில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால், நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சங்க தேர்தலை 23-ஆம் தேதி நடத்தலாம் என்றும், தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும் கூறினார். மேலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என்ற நீதிபதி […]

நடிகர் சங்க தேர்தல் ரத்து மாவட்ட பதிவாளர் உத்தரவு!!

மாவட்ட பதிவாளர் உத்தரவு. நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக 61 பேர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டிருந்தார் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு. நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது […]

தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி பெறுவோம் – ஐசரி கணேஷ்!?

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும், சுவாமி சங்கரதாஸ் அணியிலிருந்து, பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமெடி நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், தோல்வி பயத்தில் பிதற்றுவதாக தெரிவித்தார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு பதிலாக, நந்தனம் ஒய்எம்சிஏ அல்லது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரிகளில் நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பரிசீலித்து, […]

நடிகர் சங்கம் தேர்தல் பற்றி எஸ் வி சேகர் சர்ச்சை கருத்து!?

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அன்றைய தினம் அங்கு தனது நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தனது நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர் அதற்கான ரசீது உள்ளிட்ட […]

நடிகர் விஷாலுக்கு எதிராக புகார்!?

கடந்த தேர்தலில் உறுப்பினராக இருந்த தான் உள்ளிட்ட சிலரை இம்முறை உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக சினிமா ஏஜண்ட் சங்கையா என்பவர், விஷால் அணியினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தபோதும் நடிகர் சங்க தேர்தலை நடத்தும் அதிகாரி புகாரை வாங்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல, நாமக்கல் மாவட்ட நடிகர் சங்க நிர்வாகியான ராஜா என்பவரும் விஷால் அணிக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news