Tag Archives: Munishkanth

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுஷ ராசி நேயர்களே

ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன். அவர் நடித்த இஸ்பேட் ராஜா, இதய ராணி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. இப்பொழுது அவர் தனுஷ ராசி நேயர்களே எனும் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். படத்தில் முனிஷ்காந்த் மற்றும் ரேணுகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்.

சீனாவிற்கு செல்லும் பிரபுதேவாவின் யங் மங் சங்.

பிரபுதேவா, லக்‌ஷ்மி மேனன் நடிக்கும் படம் யங் மங் சங். இந்த படத்தில் காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜியும் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குபவர் எம்.எஸ்.அர்ஜூன். இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சியை சீனாவில் எடுக்க இருக்கிறார்கள். இதில் பிரபுதேவா, அந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபாகர் உடன் மோதும் காட்சிகள் படமாக்க பட இருக்கிறது. இந்த சண்டை காட்சியை செல்வா மாஸ்டர் எடுக்கிறார். யங் மங் சங் லக்‌ஷ்மி மேனனுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீஸ் […]

யோகி பாபு, முனிஷ்காந்த் இணையும் புது காமெடி த்ரில்லர் படம்

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா. “இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு […]
Inandoutcinema Scrolling cinema news