Tag Archives: latest tamil cinema news

சினிமாவில் நடித்தார் தோழர் நல்லக்கண்ணு!

குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் ‘ஜிப்சி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக ஒரு குதிரையும், நடாஷா சிங் ஆறிமுகமாகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். நாடோடிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் சூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில். படத்துக்கான புரோமோஷன் பாடல் சமீபத்தில் படாமாக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசை உருவாகி உள்ள […]

சிம்புவுக்கு கதை அனுப்பி இருக்கும் மணிரத்னம்!

செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்தப்படத்தை இயக்குவதற்காக பணிகளில் இறங்கி விட்டார். இதில், ஒன்று அவர் அடிக்கடி கூறிவரும் வரலாற்று நாயகன் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுப்பது. இந்த படத்தை தயாரிக்க பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் அதற்கான முதற்கட்ட பணிகளில் மணி இறங்கி உள்ளார் என்று அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  இந்த படத்தில் நடிக்க சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோரிடம் பேசி இருப்பதாகவும், அவர்களுக்கு கதை […]

#தல59 பிங்க் ரீமேக் – டாப்சி நடித்த கதாப்பாத்திரத்தை நடிக்கபோவது இவர் தானா?

சென்னை: தல அஜித்குமாரின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்காக படத்தின் புரோமோஷன் பணிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தல அஜித்தின் 59 படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதன்படி தல அஜித், பாலிவுட்டில் வெளியாகி வரவேற்ப்பை பெற்ற ‘பிங்’ திரைப்படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பதாகவும், […]

கோர்ட்டுக்கு செல்லும் ஹன்சிகா பட போஸ்டர்!

சென்னை: திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக ஆறிமுகமானவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என்று 49 படங்கள் வரை நடித்துள்ளார். இவரின் 50வது படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு மகா என்று பெயரிட்டுள்ளனர். எக்சட்ரா எண்டர்டெயின்மெட் நிறுவமன் சாபில் மதியழகன் தயாரிக்கிறார். திரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், நடிகை ஹனிசிகா காவி உடையில் கஞ்சா புகைப்பது போன்று இடம் […]

வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில், தமிழகத்தில் ஆளும் கட்சியை தவறாக விமர்சிப்பது போன்று சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களை கிழித்தனர். மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை போலீசார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றதாக புரளி கிளமி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தில் […]

தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே

சென்னை: தமிழ் திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருந்துகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2015ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. […]

இந்தியன்-2வுக்காக பாரிஸ் செல்லும் காஜல் அகர்வால்

சென்னை: 2.0 படத்துக்கு பிறகு இயக்குனர் சங்கர் இதியன் படத்தின் 2ம் பாகத்தை இந்தியன்-2வாக எடுக்கவுள்ளார். இந்தியன்-2 படத்தை சங்கர் எடுப்பதாக தகவல் வெளியானதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கமல் நடிக்கும் வயதான தோற்றத்திற்கு மேக்கப் போட்டு, டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் கமல் தலைமுடி, உடல்மொழி என முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறியிருந்தார் என்று இயக்குனர் சங்கர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு பாரிஸில் வைத்து […]

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தல அஜித் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஜெர்மன் சென்று வந்த நடிகர் அஜித்குமாரை காண சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் திறண்டனர் அவர்களை போலீசார் தடி அடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித்குமார் டிரோன் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் உருவாக்கிய தக்‌ஷா என்ற டிரோன் சர்வதேச யூஏவி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பலரது கவணத்தையும் ஈர்த்தது. இதன்பின்னர், விஸ்வாசம் படபிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் நடிகர் அஜித் தொடர்ந்து சென்னை […]

பெண் பத்திரிகையாளரை அவதூராக பேசி வாக்கி கட்டிகொண்ட நடிகை கஸ்தூரி!

சென்னை: டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு டிவிட்டரில் ரியாக்‌ஷன் கொடுத்து சர்ச்சையை கிளப்பிவிடுவார். நெட்டீசனக்ளும் அவரை கலாய்த்து தள்ளிவிடுவார்கள். இந்நிலையில், சமீபத்தில் இந்தியா வந்த டிவிட்டர் சிஇஓ-வை விமர்சனம் செய்து பிரச்னையில் சிக்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் சிஇஓ  ஜாக் இந்தியா வந்திருந்தார். அப்போது, டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுடன் நடந்த ஒரு கருத்தரங்கில் தலீத் சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு படத்தை பரிசாக வழங்கினார். அதில், […]
Page 10 of 15« First...«89101112 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news