Tag Archives: Latest sports news

தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா அணி!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில்  ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித் […]

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு!!

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் பிளங்கெட்டுக்கு (Plunkett) பதிலாக மார்க் உட் களமிறக்கப்பட்டுள்ளார். இதே போல பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் சோஹைல் மற்றும் இமத் வாசிம் ஆகியோருக்கு பதிலாக சோயப் மாலிக் மற்றும் ஆசிஃப் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

‘ரவீந்திர ஜடேஜா’ புகழ்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்!!?

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ரவீந்திர ஜடேஜாவைப் போல் வேறு எந்த வீரரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆட்டத்திற்கு ஏற்றார் போல் ஃபீல்டிங்கில் திறமையுடன் செயல்பட்டு எதிரணிக்கு ரன் சேராமல் தடுப்பதிலும், கடினமான கேட்சுகளை செய்து வீரர்களை அவுட்டாக்குவதிலும் ஜடேஜா சிறப்பாகச் செயல்படுவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். எதிரணி வீரர்கள் ரன் எடுக்கையில், ஸ்டம்புகளை குறிவைத்து எறிந்து ரன் அவுட்டாக்குவதிலும் ஜடேஜா சூப்பர் என்று மைக்கேல் கிளார்க் புகழ்ந்துள்ளார்

உலக கோப்பையில் இன்று நான்கு அணிகளிடையே போட்டி!!

உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரில் இன்று, இலங்கையும் நியுசிலாந்தும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பனிரெண்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணியை, திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி எதிர்கொள்கிறது. வேல்ஸ் தலைநகர் கார்டிஃப்பில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் ஆரன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய […]

தனது மகனுக்கு அறிவுரை கூறிய சச்சின்

தனது மகன் அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தனது மகனை வற்புறுத்தியதில்லை என்று கூறினார். வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என தனது தந்தை தனக்குஅறிவுரை சொன்னதாகவும், அதே அறிவுரையை தற்போது தனது மகனுக்கு வழங்கி இருப்பதாகவும் சச்சின் கூறினார். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் […]

கால்பந்து மைதானத்திலே உயிரை விட்ட நடுவர்-திடீர் மரணம்

பொலிவியாவில் ‘எல் அட்லா’ என்ற இடத்தில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்தன இந்த போட்டிக்கு விக்டர் ஹ்யூகோ என்பவர் நடுவராகச் இருந்தார். அப்போது திடிரென்று நடுவர் மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிக்சை பலனிற்றி உயர் இறந்தார். அதன் பின் நடத்திய சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகும் யுவராஜ் சிங் அதிரடி முடிவு

இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இந்திய அணியில் 2000ம் ஆண்டு அறிமுகமான யுவராஜ் சிங் 2003, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளார். இவருக்கு புற்றுநோய் தாக்கம் அதிகரித்ததால் தொடர் சிகிச்சையில் இருந்தார். பல பெரிய போராட்டங்களுக்கு பின்னர் இந்திய அணியில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார் யுவராஜ் சிங். இருப்பினும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அது அமையவில்லை. இந்நிலையில் […]

2019 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யபட்டது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட தனது அணியை அறிவித்துள்ளது. மேலும் இதில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் […]

நோ பால் பிரச்சனை !? தட்டிக்கேட்ட தோனிக்கு அபராதம்

ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை அணி பந்து வீச்சாளா்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசவே ராஜஸ்தான் அணி ரன் சோ்ப்பதில் சோர்ந்து போனது. இறுதியில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சோ்த்தது. அதை தொடா்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளளை கொடுத்தது. […]

உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியல்!? இந்திய தேர்வுக்குழுத் அதிரடி

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் அணியும் வெற்றி பெற கடுமையாக முயற்சிகள் செய்து வருகின்றது. ஐ.பி.எல் தொடர் முடிந்த இரண்டு வாரத்திலே இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் தொடங்கவுள்ளது. இது இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5-வது உலகக்கோப்பைத் தொடர். உலககோப்பைக்கான தொடரில் இடம்பெற, ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியது இந்திய தேர்வுக்குழு. எனினும் முக்கிய […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news