Tag Archives: kamal

கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிட்ட சூர்யா!!

கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் சூர்யா தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து சூர்யா கூறும்போது, ‘நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஒரு இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை எல்லா ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு ரசிகனாக வெளியிடுவதை ஒரு கர்வமாக, உரிமையாக, கடமையாக நான் பார்க்கின்றேன். இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் […]

முதன்முறையாக கமல் படத்தில் விவேக்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‛மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். 30 ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தவர், கமல் உடன் மட்டும் இதுவரை நடிக்கவே இல்லை.  கமல் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் விவேக். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2′ படத்தில் விவேக்கும் முக்கியமான பாத்திரத்தில் […]

கோமாளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ?

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24ஆவது படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை பற்றியும் அதனால் இவ்வுலகில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இப்படம் […]

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி!?

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-3 நேற்றிலிருந்து ஆரம்பமானது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்த சீசனில் நடிகை கஸ்தூரி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று அனைவரும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று போட்டியாளர்களின் பட்டியலில் கஸ்தூரி இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.  இருப்பினும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியமாக வரைந்துள்ள புகைப்படம் பிக் […]

கமலுக்கு பதிலா? பாகுபலி பிரபாஸ்!-இயக்குனர் ஷங்கர்

பல்வேறு தடங்கல்களுக்கு பின் இந்தியன் 2 படத்தை இயக்க படக்குழு அண்மையில் முடிவு செய்தது. இதற்காக இயக்குநர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் பல வெளிநாடுகளுக்கு சென்று படத்திற்கான லொக்‌ஷேனை தேடும் பணியில் மும்முரம் அடைந்தனர். இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் விவரங்களை முடிவு செய்து வழங்க இயக்குநர் ஷங்கரிடம் லைகா நிறுவனம் கேட்டுள்ளது. லைகாவின் இந்த நடவடிக்கை ஷங்கரை மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தை […]

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’-படத்தின் பாடல் வெளியீட்டு விழா !?

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் […]

கடாரம் கொண்டான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – மாஸ் காட்டிய ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த […]
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news