Tag Archives: kamal haasan

கமல் மீது பண மோசடி புகார் – ஞானவேல் ராஜா!!?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னாலே அவரை வைத்து படம் தயாரித்த இயக்குனர்கள் அரசல் புரசலாக நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். அந்தப் பிரச்சினைகளுக்காகவே கமல்ஹாசன் சொந்தப் படங்களைத் தயாரித்து நடித்துக் கொள்வார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியில் நடிக்க ஆரம்பித்த படமான ‘சபாஷ் நாயுடு, இந்தியன் 2’ ஆகிய படங்கள் பிரச்சினைகளில் சிக்கியதும் சமீபத்திய வரலாறு. கமல்ஹாசன் நடித்து 2015ல் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ படம் நிதிப் பிரச்சினை காரணமாக வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியது. அப்போது கமல்ஹாசனுக்கு […]

இந்தியன் 2 :படத்திலிருந்து விலகிய முன்னணி நடிகை…

இந்தியன் 2′ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடைபெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணம், கமல்ஹாசனுக்கு மேக்கப்பில் முழு திருப்தியில்லாததுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்தனர். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சமுத்திரகனி மற்றும் […]

முதன்முறையாக கமல் படத்தில் விவேக்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‛மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். 30 ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தவர், கமல் உடன் மட்டும் இதுவரை நடிக்கவே இல்லை.  கமல் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் விவேக். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2′ படத்தில் விவேக்கும் முக்கியமான பாத்திரத்தில் […]

கமலுக்கு பதிலா? பாகுபலி பிரபாஸ்!-இயக்குனர் ஷங்கர்

பல்வேறு தடங்கல்களுக்கு பின் இந்தியன் 2 படத்தை இயக்க படக்குழு அண்மையில் முடிவு செய்தது. இதற்காக இயக்குநர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் பல வெளிநாடுகளுக்கு சென்று படத்திற்கான லொக்‌ஷேனை தேடும் பணியில் மும்முரம் அடைந்தனர். இதற்கிடையில், இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் விவரங்களை முடிவு செய்து வழங்க இயக்குநர் ஷங்கரிடம் லைகா நிறுவனம் கேட்டுள்ளது. லைகாவின் இந்த நடவடிக்கை ஷங்கரை மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தை […]

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]

கைமாறுகிறதா கமலின் இந்தியன் 2?

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. அதன் முதல் கட்ட படப்படிப்பு கமலின் சேனாதிபதி தோற்றம் சரியாக இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்படி ஆரம்பிக்கும் பொழுதே பிரச்சனையில் இருந்த இந்தியன் 2 படத்திற்கு மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் மொத்த பட்ஜெட்டை கேட்டுள்ளனர். அதற்கு காரணம் 2.0 வில் அவர்களுக்கு உண்டான நஷ்டம். ஆனால் சங்கர் அதற்கு மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் கைமாறா […]

கமலுக்கு அழைப்பிதழ் கொடுத்த ரஜினி – வருவாரா கமல்?

ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ரஜினி சினிமா பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். ரஜினி கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த தேதியில் கமலுக்கு இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால் கமல் ரஜினியின் மகள் திருமணத்திற்கு செல்லுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news