Tag Archives: kalyani piriyadarshan

சிவகார்த்திகேயனின் ஹீரோ இன்று துவக்கம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக வளர்ந்து இருப்பவர். அவர் நடித்து வெளிவர இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. இப்பொழுது அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹீரோ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு ஜார்ஜ். எடிட்டிங் ரூபன். இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தை KJR Studios தயாரிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு […]

பாலாவின் நாயகி சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்

சிவகார்த்திகேயன் நயந்தாரா இணைந்து நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரும்புத்திரை புகழ் மித்ரன் படத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். அதில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிருறார் என தகவல்கள் வெளியானது. இப்பொழுது இன்னொரு ஹீரோயினும் அவருடன் இணைந்துள்ளார். நாச்சியார் படத்தின் மூலம் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவானா சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

250 டான்ஸர்களுடன் ஸ்பெயினில் உருவாகும் காஜல் அகர்வாலின் படப் பாடல்

காஜல் அகர்வால் நடிக்கும் பேரீஸ் பேரீஸ் திரைக்கு வர இருக்கிறது. அவர் கமலின் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். இப்பொழுது 96 ரீமேக்கில் நடிக்க இருக்கும் சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம். இந்த படத்தின் பாடல் காட்சிகள் ஸ்பெயினில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 250 டான்ஸர்களை வைத்து இந்த பாடல் உருவாகிறது. வெளிநாட்டில் […]

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் பிரபல இயக்குநரின் மகள்

சிவகார்த்திகேயன் இரும்புத்திரை புகழ் மித்ரன் இணையும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை 24AM தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வந்தது. இப்பொழுது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இணைய இருக்கிறார். இவர் வான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அறிமுகம் தெலுங்கு சினிமாவில் ஹலோ படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Inandoutcinema Scrolling cinema news