Tag Archives: jayam ravi press meet

ஜெயம்ரவியின் 25வது படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி கோமாளி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 9 வேடங்களில் நடித்து வரும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அண்மையில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் 25 ஆவது படத்தை இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரபல பாலிவூட் நடிகை நிதி அஃகர்வால் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது

திரைக்கு வரவிருக்கும் ஜெயம்ரவியின் “கோமாளி”- பிரதீப் ரங்கநாதன்

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான “அடங்க மறு” உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி […]
Inandoutcinema Scrolling cinema news