Tag Archives: inandout cinema

துப்பறிவாளன்-2 லேட்டஸ்ட் அப்டேட்..!

துப்பறிவாளன்-2 லேட்டஸ்ட் அப்டேட்..! மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஆஷியா நடிக்கிறார். மேலும் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்க்கும் இப்படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், லண்டனி […]

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஆனார் டி.ராஜேந்தர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய தலைவர் அருள்பதியை விட 12 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் அணியில் இருந்து செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மன்னன், பொருளாளர் பதவிக்கு போட்யிட்ட பாபுராவ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தோல்வி அடைந்தார். துணை தலைவர் […]

வெற்றி மாறன் படத்தில் சூர்யா!?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்து வருபவர் வெற்றி மாறன். பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை, வட சென்னை, அசுரன் மொத்தம் 5 படங்களை மட்டுமே இயக்கி உள்ளார்.  அசுரன் படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன், அடுத்த படத்தில் சூரியாவுடன் இணைய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலைகளை தயாரிப்பாளர் கலைப்புலி தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், அசுரனின் அரசு வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணைவதில் மட்டற்ற […]

அமீருக்கு ஜோடியான சாந்தினி

இயக்குனரும், நடிகருமான அமீர், ‛நாற்காலி’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, இருட்டு போன்ற படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அமீர் அரசியல்வாதியாக நடித்து வரும் இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இப்போது சித்து பிளஸ் டூ, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி படங்களில் நடித்த சாந்தினி நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்கிறார் சாந்தினி.

ஆண் நண்பருடன் ஒட்டி உரசி செம ஆட்டம் போட்ட மீரா..

மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். அடிக்கடை சர்ச்சையில் சிக்கிய அவர், பிரபலமாகலாம் என்று எண்ணி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய மீரா மிதுனுக்கு சினிமாவில் ஏற்கனவே இருந்த வாய்ப்புகளும் பறிபோனது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான கவர்ச்சியான போட்டோக்களையும் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். அதோடு ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் […]

தெறிக்கவிடும் பட்டாஸ் ’மொரட்டு தமிழன் டா’ ரிலீஸ்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்சடா, ஸ்நேகா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல் வெளியாகி வைரலான நிலையில், தற்போது ‘மொரட்டு தமிழன் டா’ பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஆளப்போறான் தமிழனை பீட் செய்யும் அளவுக்கு மொரட்டு தமிழன் பாட்டு இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள […]
Page 6 of 336« First...«45678 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news