Tag Archives: inandout cinema

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனைனா

காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. மாசிலாமணி, வம்சம், சமர், தெறி, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சுனைனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி உலாவுகிறதே, அது உண்மையா எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த […]

மீண்டும் சர்ச்சையில் சிவகார்த்திகேயன் படம்…

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த ஹீரோ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதைக்கு உரிமை கோரி உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். தனது கதையை திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 2 கதை சுருக்கங்களையும் ஆய்வு செய்த எழுத்தாளர் சங்கம் ஹீரோ கதை திருட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதம் […]

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தாண்டு இவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலை அவர் சமீபத்தில் வெளியிட்டார். சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு […]

மாநாட்டில் சிம்புவுக்கு வில்லன் இவரா,!?

நடிகர் சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி திடீரென நிறுத்தப்பட்டது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் […]

வலிமை Updates :முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித்…

கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் வலிமை படத்திலும் போலீசாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அஜித். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புத்தாண்டிற்கு பின் சென்னையில் நடைபெறுகிறது. வலிமை படத்தில் இதுவரை அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகளே படமாக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தபடியாக கதாநாயகி மற்றும் கேரக்டர் நடிகர் நடிகைகளுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

ஆரவ்வின் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த் சிறப்புத் தோற்றம் !

ஆரவ், ஆஷிமா நர்வால்  நடிப்பில் உருவாகியிருக்கும் “ராஜபீமா” திரைப்படம் 2020 ஆம் வருடத்தின் எதிர்ப்பார்க்குரிய  படங்களில் ஒன்றாக ஆகியிருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் கலந்து கட்டி கச்சிதமாக இருந்ததே, இப்படம்  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியதற்கு காரணம். இப்போது மேலும் ஒர் ஆச்சர்யமாக யாஷிகா ஆனந்தின் சிறப்புத்தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியிருக்கிறது. இயக்குநர் நரேஷ் சம்பத் இது குறித்து கூறியதாவது…. ஆம்,  இப்படத்தில் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். […]

லேடி சூப்பர் ஸ்டார் காதலர் விக்கியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள்..

நயன்தாரா அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுபவர். இந்நிலையில் அவர் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்படங்களில் நயன்தாரா மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, சூப்பர் அன்பான இயக்குநரே. புகைப்படங்களை வெளியிடுவது எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக இப்படி புகைப்படங்கள் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். […]

ரஜினி 168 : கிராமத்து பெண்ணாக மீனா

ரஜினியின் ‛தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது. இதையடுத்து, அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 168வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து படங்கள் இயக்குவதில் சிவா ஒரு ஸ்பெஷலிஸ்ட். எனவே இதுவும் ஒரு கிராமத்து படமாக தான் இருக்கும் என கூறப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீனா […]

தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, கரூர், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஊட்டியில் முழு சூரிய கிரகணம் 9.26 முதல் தெரிந்தது. மற்ற பகுதிகளில் வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தில் 90 சதவீதம் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிரகணம் விலகியதும், முழுமையாக சூரியனை பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர் சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றுகிறது. […]
Page 3 of 336«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news