Tag Archives: inandout cinema

நியுசிலாந்துக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி…

ஹாமில்டனில் (Hamilton) நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ரோஹித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 65 ரன்னிலும், கேஎல் ராகுல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்களில் […]

நண்பன் என்பதற்கும் மேலானவர் அனிருத் – நெகிழ்ந்த இசையமைப்பாளர்கள்!

டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், சினேகா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், பட்டாஸ். இசை, விவேக், மெர்வின்.இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக, இசை அமைப்பாளர் அனிருத் குரலில் வெளியான, ‘ஜிகிடி கில்லாடி…’ பாடலையும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.இது குறித்து விவேக், மெர்வின் ஆகியோர் கூறுகையில், ”எங்களுக்கு, ஒரு நண்பன் என்பதற்கும் மேலானவர் அனிருத். எங்களுக்காக அவர் பாடியது மிக மகிழ்ச்சியாக உள்ளது,” என்றனர்.

ரொம்பவே உஷாரன பார்ட்டி டாப்சி!

நடிகை டாப்சி, ரொம்பவே உஷாரன பார்ட்டிlயாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் பற்றியும், அதற்காக நடக்கும் போராட்டங்கள் பற்றியும் கேட்டபோது, ”எனக்கு அந்த அளவுக்கு, பொது அறிவு, அரசியல் அறிவு இல்லை. ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன், அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால், எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஏதோ பெரிதாக ஒரு விஷயம் நடக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது,” என்றார்.

ரஜினிக்கு வில்லியாக மாறிய குஷ்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள்.மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். இந்த நிலையில், குஷ்பு எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்தது.  […]

வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார், ராதிகா, மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, ‘கதையும், எங்கள் கேரக்டரும் சரியாக அமைந்ததால், ஒரே படத்தில் மூவரும் இணைந்து நடிக்கிறோம்’ என்றார். மேலும், போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி, அந்த படம் பிரச்னையில் சிக்கி, […]

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இசைக்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷை பாராட்டிய சூப்பர்ஸ்டார்…

மகாநடி’ படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதனையடுத்து தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை,168 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் கேக் ஊட்டிய படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் சிவா மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாடகைத் தாயாக நடிக்கும் நடிகை!?

பாலிவுட்டில் இதுவரை கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்து கொண்டிருந்த கீர்த்தி சனோனுக்கு, இப்போது, நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையிலான செமத்தியான வாய்ப்பு கிடைத்துள்ளது. மிமி என்ற படத்தில் வாடகைத் தயாக நடிக்கிறார். ”ஹிந்தியிலும் சரி, மற்ற மாநில மொழிப் படங்களிலும் சரி; இதுவரை, இப்படி ஒரு கதைக்களத்தில் எந்த படமும் வந்தது இல்லை. இந்த படத்தில், என் முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்த காத்திருக்கிறேன். வாடகைத் தாயாக நடிப்பது புது அனுபவமாக உள்ளது,” என, உறுதியுடன் கூறுகிறார், […]
Page 2 of 336«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news