Tags : inandout cinema

cinema Indian cinema Latest News News

தளபதி 66 படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு.. கொண்டாடும் ரசிகர்கள்!!

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி […]Read More

cinema Indian cinema Latest News News

‘சுழல் : தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக 3D தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தியா

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர். இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி, அனிருத், லோகேஷ், விஜய் சேதுபதிக்கு அன்பு முத்தம் கொடுத்த கமல்! வைரலாகும்

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘நாட்டுக்கோழி, மீன் வறுவல் முதல் பீடா வரை’ விருந்து வைத்து அசத்திய கமல்!வைரலாகும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு “நாட்டுக்கோழி சூப், முருங்கைக்கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சு போட்ட வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #AKUKTrip.. அஜித் லண்டனுக்கு பறந்தது ஏன்? – வைரல் ஃபோட்டொஸ்!

வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணி AK 61க்காக ஒன்றிணைந்திருக்கிறது. அதன் படபிடிப்புகள் ஐதராபாத், புனே என விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அநேகமாக AK61 நடப்பாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் எதையும் வெளியிடாமல் வழக்கம் போல படக்குழு கப்-சிப் என ரகசியத்தை காத்து வருகிறது. இதனிடையே இந்த படத்துக்கு அஜித்குமார் தனது உடல் எடையை குறைத்திருப்பதால் அது தொடர்பான ஃபோட்டோக்கள் மட்டும் சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகிறது. […]Read More

cinema Latest News News Tamil cinema

ஹிட் பட இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி ? வெளியான புதிய தகவல்!!

சுல்தான்’ படத்திற்குப் பிறகு கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்திலும் நடித்து வருகிறார். ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

#ரெஜினா: எனது படங்களில் முக்கிய படமாக இது இருக்கும் – சுனைனா!!

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

“சண்டாளியே என் சதிகாரியே…” –  வெளியானது அருண் விஜய் படத்தின் பாடல் !!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யானை’. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் கருடனாக நடித்த ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘என் சண்டாளியே…” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

போட்டோ போட்டு தனுஷ் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!!

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் ‘சார்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் […]Read More

cinema Indian cinema Latest News News

சிம்பு பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் ! வெளியான புதிய அப்டேட்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !