Tag Archives: inandout cinema updates

மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க விரும்பாத பிரபல நடிகை

தமிழின் மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் அஜித் விஜய் போன்றவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரியான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அவர்கள் ஹீரோவாக நடித்தாலும் ஒரு சில படங்களில் குழந்தைக்கு தந்தையாகவும் நடிக்கின்றனர். அவர்களுக்கு ஜோடியாக நடிகைகளும் தானாகவே அம்மாவாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க நடிகை ரம்யா நம்பீசனுக்கு விருப்பம் இல்லையாம். ஆகையால், புதுமுகங்களுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறியுள்ளார்.

”கன்னி மாடம்”-இயக்குனர் போஸ் வெங்கட்!!

ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப்பட்டிருக்கும் போது, அது படப்பிடிப்பு நேரத்தின்போது நிச்சயம் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குறித்த நேரத்தில் முடிக்க முடியும். “கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த […]

திருமணத்திற்கு பிறகு ஜோடி சேரும் ஆர்யா – சாயிஷா

கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இந்த நிலையில், கஜினிகாந்த் படத்தைத் தொடர்ந்து டெடி என்ற படத்தின் மூலம் இருவரும் சினிமாவில் ஜோடி சேர்ந்துள்ளனர். சக்தி சௌந்தர ராஜன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோருடன் இணைந்து சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டூடியோ […]

மே30-ல், மோடியின் பதவி ஏற்பு விழா!?

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். மோடி மீண்டும் பதவியேற்க உள்ள நாள், நேரம் மற்றும் கடந்த முறையைப் போல அயல்நாட்டுத் தலைவர்கள் யாரேனும் அழைக்கப்பட உள்ளனரா என்ற விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

விராட் கோலி ஒரு ரன் மிஷின்- பிரையன் லாரா

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய லாரா,  80களிலும், 90களிலும் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு மாற்றாக வித்தியாசமான கிரிக்கெட் வீரராக விராட் கோலி இருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் விராட் கோலி, தனது உடல் தகுதிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் எனவும் கோலி ஒரு ரன் மிஷின் போல தான் என்றும் பிரைன் லாரா பாராட்டி உள்ளார்.

தர்பார் படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா!?

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் இருக்கிறார். இந்த மாத இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு […]

மீண்டும் அரியணை ஏறும் பாஜக!!

நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ந் தேதி முதல் கடந்த 19ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, பா.ஜ.க. முன்னிலை வகித்து வந்தது. 437 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் 2014 மக்களவைத் தேர்தலைவிட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
Page 2 of 43«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news