Tag Archives: inandout cinema updates

பூஜையுடன் துவங்கியது அருண் விஜய், கார்த்திக் நரேன், கூட்டணியில் உருவாகும் மாஃபியா

தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், எல்லைக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இது ஒரு அற்புதமான தருணம். மிக திறமையான இரண்டு ஆளுமைகள் இணைவதை பற்றிய செய்தி தான் இது. ஆம், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க “மாஃபியா” படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தூண்டியுள்ளது. அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது விடாமுயற்சி, தூண்டுதல் மற்றும் துல்லியத்தன்மை பற்றியது. குறிப்பாக, லைகா […]

“யு” சான்றிதழ் “விருது”

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சீனிவாசன். சண்டைப்பயிற்சி – “க்னாக் அவுட்” நந்தா. எடிட்டிங் – துர்காஸ். நடனம் – சர்வஜித், பாடல்கள் – ஆதவன் மற்றும் NTC.சரவணன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் […]

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவின் ‘தண்ணி வண்டி’

எந்த ஒரு திரைப்படம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் […]

‘சிக்ஸர்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிக்கொடுத்த ராக்ஸ்டார் அனிருத்

அனிருத் எந்த இசை வகைகளுக்கும் ஒரு ஒத்த குறியீடாக மாறுகிறார். இது அவர் இசையமைக்கும் வெற்றிப் பாடல்களை பற்றி மட்டுமல்ல, அவரது மாயாஜாலக் குரல், மெல்லிய நனைவில் உங்களை ஊற வைக்கும் அதே நேரத்தில், அவரது மேற்கத்திய இசை பாடல்கள் இடைவிடாமல் உங்கள் கால்களை பார்ட்டி மனநிலைக்கு கொண்டு சென்று ஆட வைக்கும். தற்போது ஜிப்ரான் இசையமைத்த “சிக்ஸர்” படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது […]

ஓய்வு எப்போது? அறிக்கையை வெளியிட்ட தல டோனி!!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியின் செயல்பாடுகளும், ஆட்டத் திறன்களும் விமர்சனத்திற்குள்ளாகின. தோனி ஓய்வு பெறப் போவதாகவும், இந்த உலகக்கோப்பைத் தொடர் தான் அவர் விளையாடும் கடைசித் தொடராக இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் பரவின. இலங்கைக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடும் போட்டிக்குப் பின்னர், தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வு முடிவு தொடர்பாக பேசியுள்ள தோனி, தான் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது […]

பல கோடிக்கு கேரவன் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர்!?

திரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அல்லூ அர்ஜூன். இதனையடுத்து மேலும் இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அல்லூ அர்ஜூன் மிக காஸ்ட்லியான ஒரு கேரவனை வாங்கியிருக்கிறார் என்று தெலுங்கு திரைப்பட துறையில் பேச்சுக்கள் கிளம்பின. அதை உறுதி செய்ய்யும் வகையில் அல்லூ அர்ஜூன் அந்த கேரவனின் உள் புகைப்படம், வெளி புகைப்படம் என்று அனைத்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ […]
Page 15 of 96« First...10«1314151617 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news