Tag Archives: inandout cinema news

வைரலாகும் ஹேஸ்டாக்!!டென்ஷனாகும் அஜித் படக் குழு…

நடிகர் அஜித், நடிகை வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிப்பாளர் போனிக் கபூரே தயாரிக்கப் போவதாகவும், இயக்குநர் ஹெச்.வினோத்தே இயக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, படத்துக்கான தொழில் நுட்பக் கலைஞர்கள் […]

திரிஷா காட்டில் அடைமழை!! 3 பெரிய படங்கள்…

தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.கடந்த வருடம் வெளிவந்த ’96’ படத்திற்குப் பிறகு த்ரிஷா மீண்டும் பாப்புலர் ஆனார். அவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன. […]

Satellite Shankar Trailer: Patriot Sooraj Pancholi Gears Up For His Mission

After making his Bollywood debut with the 2015 film ‘Hero’, actor Sooraj Pancholi is all set to appear on-screen for the second time with the upcoming film ‘Satellite Shankar’. A 2 minute 48 seconds trailer dropped today and it stars Sooraj and Megha Akash. The trailer begins with Sooraj joining the army with big aspirations. […]

அஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நடிகை!

ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண் டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இதற்கு முன்பு அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அஜீத் 60வது படத்திலும் இணைந்தால் இப்படம் அவர்கள் இணையும் ஐந்தாவது படமாகி விடும்.

மீண்டும் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி எப்போதுமே நண்பர்களுக்கும், நட்புக்கும் மதிப்பு கொடுக்கிறவர். இதனால் நண்பர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்து வந்தார். ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், கதாநாயகன், டிராபிக் ராமசாமி, இமைக்கா நொடிகள் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இது தனது மற்ற படங்களை பாதிப்பதாக கருதிய விஜய் சேதுபதி இனி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ஓ மை கடவுளே என்ற […]

Nicole Kidman, Margot Robbie & Charlize Theron Go To War In New Bombshell Trailer

The full trailer for Bombshell has provided a more in-depth look at one of the season’s most anticipated dramas, detailing the takedown of Fox News mogul Roger Ailes. The newly released video captures Carlson and Kelly’s dramatized characters alongside other recognizable Fox News heavyweights — including former anchor Kimberly Guilfoyle — as the network slips […]

கீர்த்தி சுரேஷின் புதிய படம் பெண்குயின்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 24வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று(17.10.19) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பெண்குயின் என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளான […]

டிவி தொகுப்பாளர் ஆகிறார் ராதிகா!!

கோடீஸ்வரி என்ற பெயரில் பெண்களுக்கான கேம் ஷோ தனியார் டிவி சேனல் ஒன்றில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி, புகழ்பெற்ற குரோர்பதி நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு தமிழில் பெண்களுக்காக முதன் முதலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிவி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ராதிகா, தற்போது முதல் முறையாக தொகுப்பாளராக அவதாரம் எடுக்க […]

வெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்!

விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் இணையும். விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைவது அவ்வளவு எளிதானதல்ல. வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் ஒருவரும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஒருவரும் முதல் முறையாக ஒன்றாக இணைகிறார்கள். ஆம்… தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் […]

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.  இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
Page 1 of 21912345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news