Tag Archives: inandout cinema new movies

மாஸ்க் அணிந்து சென்ற விஜய்!

ஒவ்வொரு படம் நடித்து முடித்ததும் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த நடிகர் விஜய், சமீப காலங்களாக அந்த வழக்கத்தை மாற்றியிருந்தார்.  இந்நிலையில், தான்  நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவிருக்கும் நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளார்.  விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சாஹோ இயக்குனரின் அடுத்த படம்?

பிரபாஸை வைத்து சாஹோ படத்தை இயக்கியவர் சுஜீத். ரூ.300 கோடியில் பிரமாண்டமாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததோடு தெலுங்கில் பெரிதாக வசூலிக்கவில்லை. அதேசமயம் ஹிந்தியில் ரூ.150 கோடி வசூலித்தது. இந்தநிலையில், சாஹோ ரிலீசுக்குப்பிறகு ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் சுஜீத். மீண்டும் சாஹோ போன்று ஒரு மெகாபடத்தை இயக்குவதற்கு முன்னணி ஹீரோக்கள் கால்சீட் தர தயங்குவார்கள் என்பதால், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க சுஜீத் திட்டமிட்டு வருவதாக டோலிவுட்டில் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அருந்ததி’ – ஹிந்தி ரீமேக் நாயகி யார் ?

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்து 2009ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘அருந்ததி’. ஜமீன் காலத்து பேய் கதையாக வெளிவந்த இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது. பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா அல்லது கரீனா கபூர் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் யாருடைய கால்ஷீட் […]

கோமாளி பட இயக்குநர்க்குபரிசளித்த தயாரிப்பாளர் !!

டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய […]

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை…

சந்திராயன் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி தொடர்ச்சியாக படும் 14 நாட்களுக்குள், அதாவது நிலவில் ஒரு பகல் பொழுதுக்குள் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. லேண்டர் விக்ரம் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த காலகட்டத்திற்குள் தகவல் தொடர்பை மீட்டமைக்க வேண்டியது […]

அமெரிக்க பட விழாவில் விருது-ராட்சசன்

விஷ்ணு விஷால், அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ராட்சசன். தமிழில் வெற்றி பெற்ற இப்படம், தற்போது இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காகி வருகிறது. தற்போது இப்படம் உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: ராட்சசன், அமெரிக்க திரைப்பட விழாவில விருது பெற்றிருப்பது மொத்த […]

அரசியலில் களத்தில் சிம்பு?

நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அவர் சென்னை திரும்ப இருக்கிறார். வந்ததும் முதல் வேலையாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் சந்திக்க இருக்கிறாராம். அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. இதனை சிம்புவின் நெருங்கிய நண்பரும், அவரது நண்பருமான ஹரி டிவீட் வெளியிட்டுள்ளார்.இதை […]

அமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா

சிரஞ்சீவி நடித்துள்ள பிரம்மாண்ட படமான சைரா நரசிம்ம ரெட்டி அக்டோபர் 2-ந்தேதி திரைக்கு வருகிறது. அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்னர் டிரைலர் ஐந்து மொழிகளிலும் வெளியானது. சிரஞ்சீவியின் ரசிகரான பாலிவுட் நடிகர் அமீர்கான், சைரா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இப்போதே படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டியிருப்பதாகவும், […]

நடிகை பானுப்பிரியா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை ஓராண்டு காலம் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்ததாகவும், அப்போது பானுப்பிரியா உள்ளிட்டோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாகவும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மார்ச் மாதம் அஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சம்பவ இடம் தொடர்புடைய பாண்டிபஜார்  காவல் நிலையத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை பானுப்பிரியா […]
Page 1 of 5212345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news