தெலுங்கு நட்சத்திரங்கள் சிவாஜி ராஜா, தேஜா, தமிழில் நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர். சி என, பலர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை வீசியவர் ஸ்ரீரெட்டி. இவரை நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன; மக்களும் அப்படித்தான் பேசுகின்றனர். ஆனால், இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.