Tag Archives: inandout cinema natural

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தமிழகம், கேரளா எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில். கடலூர், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தலா 8 […]

விடிய,விடிய கொட்டி தீர்த்த கனமழை!!

சென்னை அருகே தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியது. இதேபோல் பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, திரிசூலம், சேலையூர், முடிச்சூர், செம்பாக்கம், கீழ்கட்டளை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் பல இடங்களில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழை கொட்டியதால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை […]

2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தெற்கு மற்றும் உள்மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் கோவை, நீலகிரி, தேனி,  திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் […]

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக- சென்னையில் மழை!!

  • October 9, 2019
  • Comments Off
வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, இன்று (அக்., 09) காலை 10 மணியளவில் சென்னை, வடபழனி, விருகம்பாக்கம், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது

கவின் வெளியேறினாரா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் கவின். முதலில் அபிராமி, அடுத்து சாக்ஷி, தற்போது லாஸ்லியா என அவர் காதலை வைத்து விளையாடி மற்றவர்களை வெளியேற்ற அதைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், லாஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்கிறார். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பைனலுக்கு முன்பாக 5 லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போட்டியை விட்டு விலகலாம் என பிக்பாஸ் ஒரு சலுகை கொடுப்பார். கடந்த இரண்டு சீசனிலும் யாரும் […]

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி […]

புரட்டி போடும் மிகக் கனமழை-வானிலை மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மித […]

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

செப்.,25 ம் தேதியன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 சென்டிமீட்டரும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 சென்டிமீட்டரும், ஈரோடு மாவட்டம் […]

தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் அகர்வால்

உலக அதிசயங்களில் ஒன்று, காதல் சின்னமான தாஜ்மகாலை முதன் முதலாக நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால். அந்த அனுபவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார். “தாஜ்மகாலைப் பார்த்தவுடன் நான் மெய்மறந்து, மயக்கமடைந்து, அதன் மகத்துவத்துத்தால் பிரமித்து நிற்கிறேன். அதன் வசீகரிக்கும் அழகைப் பற்றி இதுவரையில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அதன் கட்டிடக் கலை, ஒலியியல், உட்புறங்களில் உள்ள விவரம், சமாதி அதன் வரலாறு என்னை கடந்த காலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றது. என் […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news