Tag Archives: inandout cinema latest

‘மாஸ்டர்’ படத்தின் அட்டகாசமான மூன்றாவதுலுக்…

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவதுலுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. இந்த லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அட்டகாசமான […]

பிரஷாந்த படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்…

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான படம் அந்தாதுன். விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற இப்படம் வசூலையும் பெற்றது. அதோடு, மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. இப்படம் தமிழில் ரீ-மேக்காகிறது. பிரஷாந்த் நாயகனாக நடிக்க, இவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்திற்காக பிரஷாந்த் 20 கிலோ எடையை குறைக்கிறார். அந்தாதூன் படத்தில் நடிகை தபு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதைப்படி அவர் […]

பிப்ரவரி இறுதிக்கு தள்ளிப்போனது நிசப்தம்

அனுஷ்கா நடிப்பில் 4 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி உள்ள படம் நிசப்தம். ரெண்டு படத்தை தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். அஞ்சலி இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேதி மாற்றம் […]

அருண் விஜய்யின் மாஃபியா ரிலீஸ் தேதி இதோ!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி ரிலீசாகிறது. தற்போது இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் மாஃபியா படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பல் டானுக்கும், அதை தடுக்கும் அதிகாரிக்கும் இடையே நடக்கும் […]

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்..

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெய்வேலியில் வரும் […]

சசிகுமாரின்”நாடோடிகள் 2″ ட்ரைலர்!இதோ…

சமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  முதல் பாகத்தின் […]

சஸ்பென்ஸ் த்ரில்லர்-வரலக்ஷ்மி நடிக்கும் “வெல்வெட் நகரம்” ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாவே கதாநாயகிகள் ஹீரோவுக்கு நிகராக சவாலான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி வரலட்சுமியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் “வெல்வெட் நகரம்” என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக வரலக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். […]

பாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் மீண்டும் ஒரு மரியாதை….

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாக உருவாகியுள்ளது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக […]

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23-ந்தேதி […]

நடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது…

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி நடிகை சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார். “தை மகள் பிறந்தாள்” என அவர் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Page 10 of 81« First...«89101112 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news