Tag Archives: inandout cinema latest v

காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன் !

“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான  படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக,  எனக்கு மிகப்பரும் ஆசிர்வாதமாக  “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும் ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு […]

நடிகர் வர்மா, கோலிவுட்டில் ஒரு புது வரவு….

நடிகர் வர்மா, கோலிவுட்டில் ஒரு புது வரவு. நடிப்பின் மீது கொண்ட பற்றினால் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பிரபல நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு வருடங்களாக நடிப்பு பயின்றார். எந்த பின்புலமும் இல்லாமல் அவர் மேற்கொண்ட கடின முயற்சிகளால் சினிமா துறையில் புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களான தீரன், காளி, தடம், இரும்புத்திரை, தமிழ் படம் 2 ஆகிய படங்களில் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் வெளியான கேடி (எ) கருப்புதுரை, ஹீரோ மற்றும் […]

இயக்குனர் அவதாரம் எடுத்த ரம்யா!

தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் […]

ரீமேக் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் அருண் பாண்டியன்…

கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒருநாள் காதலருடன் […]

“அயலான்” அப்டேட் – பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. வேற்றுகிரக மனிதர்களை கொண்ட இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டைட்டில் டீசர் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.  இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த […]

ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி… ட்ரெண்டிங்கில் பட்டாஸ் பட வீடியோ பாடல்..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியின் தர்பார் படத்துடன் மோதிய இப்படம் வசூலில் டீசண்டான கலெக்ஷனை பெற்றிருந்தது.  இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்த “ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி” வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இரட்டையர்களான மெர்வின் […]

பிரபாஸ் படத்தில் வில்லனாகும் பாலிவுட் ஸ்டார்

சாஹோ படத்தை அடுத்து ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த பீரியட் ரொமான்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பல நடிகர்களை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு தெலுங்கில் கோபாலா கோபாலா என்ற படத்தில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்திக்கு இது […]

பூஜாவுக்கு பதிலாக சுமன்!

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா உள்ளிட்டோர் நடிக்கும் படம், கபடதாரி. இதில் முக்கிய வேடம் ஒன்றில், பூஜாகுமார் ஒப்பந்தமானார்.தற்போது, அவருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடிக்கிறார். இது குறித்து சுமன் கூறுகையில், ”இதில் விவகாரம் ஏதும் இல்லை. பூஜாகுமார் திடீரென அமெரிக்கா செல்வதால், படக்குழுவினர் என்னை அணுகினர். கதாபாத்திரம் சிறப்பாக இருக்கவே ஒப்புக்கொண்டேன்,” என்றார்.
Page 1 of 1312345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news