Tag Archives: inandout cinema latest news

நியுசிலாந்துக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி…

ஹாமில்டனில் (Hamilton) நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ரோஹித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 65 ரன்னிலும், கேஎல் ராகுல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்களில் […]

2 ஆக்ஷன், 1 மியூசிக்கல் திரில்லர் – அதிரடியாக களமிறங்கும் பதம் குமார், தீபன் பூபதி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. இந்த படத்தை தயாரித்திருந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் பதம் குமார். ஏற்கனவே ஹிந்தியில் பல படங்களை இயக்கிய இவர் தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் இறங்க உள்ளார். இவருடன் இணைந்து புரியாத புதிர், ஆக்கோ படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதியும் இணைந்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக கனடாவை சேர்ந்த நின்னா பைன்ஸ் ( Ninna Bains ) என்பவர் பணியாற்ற […]

இறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் !

திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது… இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய […]

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

திருடன் போலீஸ், உள்குத்து  படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது.  ரெஜினா கஸண்ட்ரா  முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில்  தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா […]

சீறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. இப்படம் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் […]

மீண்டும் சிக்கலில் தர்பார் படக்குழு.. அதிர்ச்சியில் வினியோகஸ்தர்கள்…!?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். ஆனால், கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் கர்நாடகாவில் […]

கர்ணன் படத்தில் களமிறங்கும் தனுஷ்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்தடுத்து படக்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற ஜனவரி 16-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் 40-வது படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனுஷின் 41-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை […]

ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி நடித்த தர்பார் படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளிவருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதை கொண்டாட இப்போதே உற்சாகமாகி விட்டார்கள். சேலம் மாவட்டம் ரசிகர்கள் ஒருபடி மேலே போய் தர்பார் படம் திரையிடப்படும், தியேட்டர் மற்றும் கட்-அவுட் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்கள். சேலம் மாவட்டம் பாப்பரபட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் சேலம் மேற்கு மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஏஆர்ஆர்எஸ் என்ற தியேட்டரில் ஹெலிகாப்டரில் […]

கவர்ச்சியை வாரி வழங்கிய சமந்தா

தமிழில், சமந்தா கடைசியாக நடித்த படம் ‛சூப்பர் டீலக்ஸ்’. அதன்பிறகு தெலுங்கில் மஜிலி, ஓ பேபி, 96 ரீமேக் படங்களில் நடித்தவர், தற்போது, ‛தி பேமிலி மேன்-2′ வெப்சீரியலில் நடித்து வருகிறார். இந்தநிலையில் ஜீ சினி விருது விழாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சமந்தாவிற்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு பிங்க் நிற புடவையில் வந்திருந்தார் சமந்தா. அதோடு கவர்ச்சிகரமாக ஒரு போட்டோ ஷூட்டும் நடத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகின. […]
Page 1 of 17512345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news