Tag Archives: inandout cinema latest news updates

புதிய லுக்கில் வைரலாகும் யங் அஜித்…!

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற பைக் சேஸிங் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் அடிப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துக் கொண்ட போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் […]

இந்தியன் 2 : கமல், ஷங்கருக்கு சம்மன்?

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கமல் மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரப்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. இந்நிலையில் பிப்.,19 அன்று இரவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட […]

திரெளபதி இயக்குனரின் அதிரடியால் பரபரப்பு…

திரெளபதி படத்தை இயக்கியுள்ள ஜி.மோகன் இந்த படத்தை வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்ததோடு 14 இடங்களில் வசனத்தையும் மியூட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்சார் வெட்டிய காட்சிகளை யூட்யூபில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் ஜி மோகன் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பதால் யூடியூபில் இந்த காட்சிகள் வெளிவந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த […]

ஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்!

சிபிராஜ் முதன்முறையாக ஆக்‌ஷன் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் வால்டர். இதற்கு முன்னர் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ போன்ற போலீஸ் சார்ந்த படங்களில் சிபிராஜ் நடித்திருந்தாலும், போலீஸ் உடுப்பில் கட்டை மீசையோடு ஒரு ஆக்ரோஷமான போலீஸாக சிபிராஜ் நடிக்கும் முழு முதல் போலீஸ் படம் வால்டர். உண்மை சம்பவங்களை தழுவிய கதைகள் இப்போது பரவலாக கவனம் பெற்று வரும் நிலையில் இந்த படமும் குழந்தைகள் கடத்தல் குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு  உருவாகியுள்ளது.  இப்படத்தில் சிபிராஜுடன் […]

கியாரா அத்வானி ஹாட் புகைப்படம் – Inandout Cinema Gallery..

பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரை நிர்வாணமாக இருக்கும் அவர் ஒரு இலையை கொண்டு உடலின் மேல் பகுதியை மறைத்துக் கொள்வது போல அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானதை அடுத்து கண்டனங்களையும் சந்தித்துள்ளது.

சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் ட்ரைலர்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம்  தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது.   வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை […]

கார்த்தியின் அடுத்த படத்தில் ‘மாஸ்டர்’ நாயகி?

கார்த்தி நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘தேவ்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்த படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்ததாகவும், அதனால் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இன்னொரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கார்த்தி வாக்களித்திருந்தார் என்றும் கூறப்பட்டது. அந்த வாக்கின் படி தற்போது தற்போது புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இரும்புத்திரை மற்றும் […]

விக்னேஷ் சிவனை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதே கூட்டணி ஐந்து ஆண்டு இடைவேளைக்கு பின் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக […]

டோலிவுட்டுக்கு செல்லும் பிரியா பவானி சங்கர்…

`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்துள்ள மாஃபியா திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது.    இந்நிலையில், இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீகாந்த் […]

கர்ணன் படத்துக்கு தடைக்கோரி மனு..

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தென் தமிழகத்தின் சாதிய பாகுபாடுகளை வெளிக்காட்டியதாக பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் அமைப்பு நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ”1991ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்திற்கு […]
Page 1 of 9412345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news