Tag Archives: inandout cinema gallery

நயன்தாராவின் ஹனிமூன் ஸ்டில்ஸ் – வைரல் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கும் அவர் தன் தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் !!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து […]

நடிகர்,எழுத்தாளர் கிரேஸி மோகன் திடீர் மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் வரும் நிலையில், கிரேசி மோகன் மறைவு கோலிவுட்டில் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“சுட்டுப்பிடிக்க உத்தரவு”-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.

“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் […]

நான் அஜித்க்கு வில்லனா – பிரபல நடிகர்!

தல60ஆவது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில், அஜித் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்றும் தற்போது செய்தி பரவி வருகிறது. எடையை குறைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அஜித்தின் 60ஆவது படத்தில் அதாவது தல60ஆவது படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் போனி […]

மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்து கிடக்கின்றன. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் ரம்மி […]

NGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..!

சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி […]

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ் சார்பில் மக்களவை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 52 எம்.பி.க்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 12 கோடியே 13 லட்சம் வாக்காளர்களுக்கும் சோனியா காந்தி நன்றி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதேபோல வாக்காளர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி தெரித்த ராகுல்காந்தி, எவ்வித பாகுபாடும் இன்றி இந்தியாவில் உள்ள […]
Page 5 of 18« First...«34567 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news