Tag Archives: inandout cinema gallery

போதை ஏறி புத்தி மாறி நடிகர் தீரஜ் – பத்திரிக்கை செய்தி

புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான தீரஜ், அவரது மகத்தான தொழில் சாதனைகளுக்காக பாராட்டப்பட்டவர். தற்போது ‘போதை எறி புத்தி மாறி’ மூலம் ஒரு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக காட்சி விளம்பரங்களில் அவரது நடிப்பும் மற்றும் ‘விர்ஜின் ஸ்டோனர் ‘பாடலில் அவரது தோற்றம் மற்றும் நடனமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. இவை எல்லாம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியாக உள்ள இந்த படத்தில் அனைத்து அம்சங்களும் நிச்சயம் இருக்கும் என்பதை […]

நாநா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஒரு காலத்தில் சினிமாவில் கால்பதித்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். இவர் சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். அரசியலில் நுழைந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த சரத்குமார், அதன் பின்னர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி ஆகிறார். அதுவும், ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் நாநா என்று பெயரிடப்பட்டுள்ள படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நிர்மல்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

‘இரட்டிப்பு மகிழ்ச்சி : “கூர்கா” இயக்குனர் சாம்!!

இயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ கட்டமாகும். அவரது “100” திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படம் “கூர்கா” இந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. வேடிக்கை நிறைந்த டிரைலர் மற்றும் பெரிய பிரபலங்கள் பங்கு பெற்ற பாடல்கள் காரணமாக படத்திற்கு ஆடம்பரமான […]

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை.

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து […]

செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்

கங்கனா நடிப்பில் உருவாகி உள்ள ஜட்ஜ்மெண்டல் ஹை கியா திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கங்கனா, அவரிடம் தனது மணிகர்னிகா படத்திற்கு ஏன் எதிர்மறையான விமர்சனத்தை கூறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தேசியத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுத்ததால் தன்னை அந்த செய்தியாளர் மூர்க்கதனமான பெண் என குறிப்பிட்டதாகவும் கங்கனா குற்றம்சாட்டினார். இதனை மறுத்த அந்த செய்தியாளர், கங்கனா […]

பல கோடிக்கு கேரவன் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர்!?

திரிவிக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அல்லூ அர்ஜூன். இதனையடுத்து மேலும் இரண்டு பெரிய இயக்குநர்களின் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அல்லூ அர்ஜூன் மிக காஸ்ட்லியான ஒரு கேரவனை வாங்கியிருக்கிறார் என்று தெலுங்கு திரைப்பட துறையில் பேச்சுக்கள் கிளம்பின. அதை உறுதி செய்ய்யும் வகையில் அல்லூ அர்ஜூன் அந்த கேரவனின் உள் புகைப்படம், வெளி புகைப்படம் என்று அனைத்தும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ […]

அசத்திய ஆஸ்திரேலிய அணி! அபரா வெற்றி!!

ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடிய வார்னர் அதிக பட்சமாக166 ரன்கள் சேர்த்தார். பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் […]

மன்மதடு 2வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சை!!?

60 வயதை தொட்டுவிட்ட நாகர்ஜூனாவின் நடிப்பில் மன்மதடு படத்தின் 2 வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அக்ஷ்ரா கவுடா என்ற நடிகையுடன் ஜேம்ஸ்பாண்டு பட பாணியில் முத்தக்காட்சியில் நாகார்ஜூனா நடித்திருப்பது முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறி தெலுங்கு ரசிகர்கள் நாகார்ஜூனாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து உள்ளனர். அக்கினேனி என்ற பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து கொண்டு எப்படி இது போன்ற மட்டமான காட்சிகளில் 60 வயதுடைய நாகார்ஜூனாவால் நடிக்க முடிகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர். […]

யோகி பாபு நடிப்பில் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா !!

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த […]

தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி பெறுவோம் – ஐசரி கணேஷ்!?

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும், சுவாமி சங்கரதாஸ் அணியிலிருந்து, பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமெடி நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், தோல்வி பயத்தில் பிதற்றுவதாக தெரிவித்தார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு பதிலாக, நந்தனம் ஒய்எம்சிஏ அல்லது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரிகளில் நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பரிசீலித்து, […]
Page 3 of 18«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news