Tag Archives: inandout cinema cricket news

காதலியை கரம்பிடித்த இருமுகன் இயக்குநர்…

அரிமா நம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த சங்கர். ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநரான இவர் தற்போதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுவை வைத்து இவர் இயக்கிய அரிமா நம்பி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து விக்ரம் மற்றும் நயன்தாராவை வைத்து இருமுகன் என்றொரு படத்தை இயக்கிநார். இது மிகப்பெரிய ஹிட் அடித்து, முக்கியமான புதுமுக இயக்குநர்கள் லிஸ்டில் இவர் சேர்ந்தார். இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் சங்கர் திவ்யா ஜீவானந்தம் […]

உலகம் முழுவதும் வெளியான யோகிபாபுவின் கூர்கா

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு மனோபாபு சார்லி ஆனந்தராஜ் லிவிங்ஸ்டன் ராஜ்பரத் எலிசா எர்கார்ட் ஆகியோர் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான படம் கூர்கா. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக யோகி பாபுவின் எந்தப் படமும் இது போன்று அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் அனைத்து காட்சிகளும் சிரிக்க மட்டுமே என்பதற்கு ஏற்றதுபோல் அணைத்து ரசிகர்களையும் திரைப்படம் கவர்ந்துள்ளது.

இளைஞர்களை மிரட்ட வரும் ‘இருளன்’ !!

ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே ‘இருளன்’. இப்படத்தில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனை தான், அது மரணம் தான் என்ற வலிமையானக் கருத்தை இப்படம் தாங்கி நிற்கும். இப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது :-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்படத்தை […]

‘ரீல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !!

ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரீல்’. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். […]

“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது”-தயாரிப்பாளர் பரபரப்பு..!

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் […]

‘ரிஷப் பண்ட்’ அணியில் இடம் இல்லை – அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த இளம் வீரர் ‘ரிஷப் பண்ட்’ தேர்வு செய்யப்படவில்லை. […]

வாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்

கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான ‘பார்ம் 7’ ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் […]
Inandoutcinema Scrolling cinema news