Tag Archives: imsai arasan 24am pulikesi

தடைகளை உடைத்து பேய்மாமா படத்தை எடுப்பேன் – ஷக்தி சிதம்பரம்

வடிவேலு கதாநாயகனாக நடிக்க இருக்கும் பேய் மாமா திரைப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். அவர்கள் போஸ்டர் வெளியிட்டதில் இருந்து படத்திற்கு தடைவிதித்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் வடிவேலு இம்சை அரசன் பார்ட்-2வில் நடிக்காததுதான் இதை பற்றி பேசிய ஷக்தி சிதம்பரம்; தடைகளை மீறி சட்ட ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொண்டு பேய்மாமா படப்பிடிப்பை நடத்துவேன் என கூறியுள்ளார். ஆனால் வடிவேலு தரப்பில் இன்னும் மெளனம் சாதிப்பதற்கு காரணம் தெரியவில்லை.

வடிவேலு நடிக்கும் பேய் மாமா – காமெடி கலாட்டா

வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த படத்தில் இப்பொழுது யோகிபாபு நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து இப்பொழுது வடிவேலு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் டெக்னிஷியன் மற்றும் நடிகர்கள் யார் யார் என்று விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

சென்னை: 2006ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ”இம்சை அரசன் 24ம் புலிகேசி” இப்படம் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பக்கத்தை எடுக்க முடிவு செய்து சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். ஆனால் நடிகர் வடிவேலு சூட்டிங் சரியாக வருவதில்லை, காட்சிகளை மாற்றச்சொல்கிறார் என்று புகார் எழுந்தது. […]
Inandoutcinema Scrolling cinema news