September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: imman

தல பொங்கலுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறும் பிரபலம்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் […]

சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு இவர்தான் காரணம் – முத்துராஜ்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]

சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய பிரபல இசையமைப்பாளர்கள் – விவரம் உள்ளே

அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிக்கும் படம்தான் கனா ஆகும். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததால், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கனா படத்தின் டீசர் மற்றும் இசையை நேற்று […]

இந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா

தயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]

தல படத்தின் இசையை பற்றி மனம் திறந்த இமான் -விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]

இணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல். காணொளி உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற வாறேன் வாறேன் பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சீமராஜா படத்தின் பாடல் சில மணித்துளிகள் முன்னதாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானது […]
Inandoutcinema Scrolling cinema news