சாமி–2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது : எனது சினிமா வாழ்க்கையில் சாமி முக்கிய படமாக அமைந்தது. என்னை வியாபார ரீதியான கதாநாயகனாகவும் நிற்க வைத்தது. காசி, அந்நியன் என்று நான் நடித்துள்ள பல படங்கள் ஒவ்வொரு பிரிவினர் ரசித்து பார்க்கும்படி அமைந்தன. ஆனால் சாமி படத்தை எல்லா தரப்பினரும் விரும்பி பார்த்தார்கள். அதில் கம்பீரம் இருந்தது. அதன் பிறகுதான் தில், தூள் என்றேல்லாம் படங்கள் […]