Tag Archives: chennai weather today

புரட்டி போடும் மிகக் கனமழை-வானிலை மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மித […]

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

செப்.,25 ம் தேதியன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 சென்டிமீட்டரும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 சென்டிமீட்டரும், ஈரோடு மாவட்டம் […]

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள் லேசான முதல் மிதமான மழைக்கும் ஒரிருஇடங்களின் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]

அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாகவும, அந்த மாவட்டங்களில் ஓரிரு […]

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!!

சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. உதகையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேங்கிக்கால், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் மிதமான […]

தமிழக லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னை மாநகரின் கோடம்பாக்கம், கே கே நகர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் […]

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று […]

தமிழகத்தில் இனி அக்னி நட்சத்திரம் ! அதிகரிக்கும் வெப்பம் !

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைகிறது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சராசரி பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங் கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. […]

இயற்கையே நமது ஆதாரம் – அதிகரிக்கும் வெப்பம்! தவிக்கும் பூமி!

இயற்கை 1 பூமி வெப்பமயமாதல் என்பது நச்சுக்கலந்த வாயுகளின் நிலை அதிகரிக்கும் பொது பூமி மீது ஏற்படும் வெப்பநிலை மாற்றமே பூமி வெப்பமயமாதல். காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன் போன்ற வாயுகளின் அளவு அதிகரிக்கும் பொது அதுவே நச்சுக்கலந்த வாயுவாக மாறுகிறது.சூரியனிடமிருந்து வரும் கதிர்விச்சுயின் அளவை இது போன்ற நச்சுக்கலந்தா வாயுகள் தடுப்பதால் வெப்பம் அதிகரிக்கிறது. உலகம் வெப்பமயமாதலின் சில முக்கியமான காரணங்கள், நம்மில் பல பேர் மின்பொருளில் […]
Inandoutcinema Scrolling cinema news