Tag Archives: Bharathi raja Recent news

பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை… ட்ரைலர்

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் […]

இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கதின் 2019-2021க்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் தலைவர் பதிவில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இதனால் வரும் 14ஆம் தேதி மற்ற பதிவிகளுக்காக நடக்கவிருந்த தேர்தல் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி இணை இயக்குனர்கள் பாரதிராஜாவின் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். […]

இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகினார் பாரதிராஜா…

சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சங்க நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.  இந்நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதன் சங்கடங்களை தான் உணர்ந்துள்ளதாகவும், ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்கு வசதியாக தனது பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு மூத்த இயக்குநராக, எதிர்காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு தனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Inandoutcinema Scrolling cinema news