Tag Archives: ar rahman

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி இன்று(ஆக.,10) மாலை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களின் இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படம் உருவாக காரணமானவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எப்.எம் ரேடியோக்களில் பாடல்களை ஒளிபரப்பும் முன் அந்த பாடல் இடம் பெற்ற படத்தை தயாரித்த […]

‘அரசியல் வேண்டாம்… ப்ளீஸ்’ – ஏ.ஆர். ரஹ்மான்

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை YMCA-யில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளார் ரஹ்மான். முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சி தனியார் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி சதிஷ் தயாரிக்கிறார். இந்த இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில்  5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊர்வசி பாடல் மெட்டுக்கு ஏற்றார்போல் புதுமையான வரிகளை எழுதி அனுப்புமாறு ரஹ்மான், […]

மீண்டும் வெள்ளத்தை சந்திக்கும் சென்னை-கோமாளி!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவி 9 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதற்கான 9 லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்திற்காக கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், இப்படத்திற்காக சென்னை வெள்ளத்தை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளோம். […]

‘தலைவன் இருக்கிறான்’ பாடத்தில் இணையும் கமல், ரஹ்மான்..

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் கனவு படமான மருதநாயகத்தை போல இதுவும் ஒரு கனவு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவும் பேச்சுவார்த்தையுடனே முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏ.ஆர். ரஹ்மான் கமலுடன் இணைந்து பணிபுரிவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டிற்கு கமல்ஹாசன் பதிலளித்து தகவலை உறுதி செய்தார். லைகா மற்றும் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பிலிம்ஸ் இரண்டும் நிறுவனங்களும் இணைந்து தலைவன் […]

வசூல் வேட்டையில் இணையத்தை தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில்  5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய இசை துறையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இவர் சினிமா மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக  இதுவரை இல்லாத அளவிற்கு மிக […]

சிறகு படத்தின் டீசரை வெளியிட்ட ஆர் ரகுமான் !!

ஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வை கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின்,  “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் […]

தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல – ஏ.ஆர்.ரஹ்மான்

மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் தற்போது புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்பதற்கு பதிலாக மூன்றாவது மொழியாக இந்திக்குப் பதில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பதிவில், மத்திய அரசின் முடிவு அழகிய தீர்வு என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் 63 படத்தின் லீக்கான புகைப்படம்

விஜய் 62 தளபதி விஜய் மற்றும் நயந்தாரா நடிக்கின்றனர். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படம் என்று அனைவரும் தெரிந்த ஒன்று. அதை உறுதி படுத்தும் வகையில் ஒரு கால்பந்து மைதானத்தை சீரமைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் கால்பந்து மையப்படுத்தி உருவாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியீட்டை முன்னிட்டு, ‘Marvel Anthem’ உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். […]
Page 1 of 612345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news