Tag Archives: action king arjun

திமிரு பிடிச்சவனின் கொலைகாரனும் ரெடி

விஜய் ஆண்டனி தன்னுடைய பட டைட்டில்கள் மூலமே அனைவரையும் கவருபவர். எமன், சைத்தான் என அவரின் டைட்டில்கள் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்கும். அப்படி வைத்த டைட்டில் தான் கொலைகாரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அர்ஜுனும் நடிக்கிறார். ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டணியே இசை அமைக்கிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கொலைகாரனின் பாடல்கள் ரெடி விரைவில் வெளியிடுவோம் என தெரிவித்து கொலைகாரனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார்.

மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]

உதவி இயக்குனராக வேலை பார்த்த விஷாலை பற்றி, ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் – விவரம் உள்ளே

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர். இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஷால், சமீபகாலமாக அரசியலில் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பெருத்த கேலி பேச்சுகளுக்கும் […]
Inandoutcinema Scrolling cinema news