Tag Archives: 24AM Studios

பாலாவின் நாயகி சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்

சிவகார்த்திகேயன் நயந்தாரா இணைந்து நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரும்புத்திரை புகழ் மித்ரன் படத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். அதில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிருறார் என தகவல்கள் வெளியானது. இப்பொழுது இன்னொரு ஹீரோயினும் அவருடன் இணைந்துள்ளார். நாச்சியார் படத்தின் மூலம் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவானா சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SK-15 மித்ரன் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்?

சிவகார்த்திகேயன் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இணையும் படம் SK-15. இந்த படத்தை 24AM தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் தேர்வு முடிவுற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. ஆனால் இயக்குநர் ரவிக்குமார் எடுத்து கொண்டிருக்கும் படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில் மித்ரனின் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
Inandoutcinema Scrolling cinema news