சைக்கோ படத்தின் உருக்க “தாய் மடியில்” வீடியோ பாடல் !

கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ஜனவரி 24ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. க்ரைம் திரில் பாணியில் உருவான இப்படம் கலெக்ஷனில் நல்ல வசூல் ஈட்டியது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த “தாய் மடியில் நான் தலை சாய்க்கிறேன் ” என்ற உருக்கமான பாடல் வீடியோ யூடியுபில் வெளியாகியுள்ளது. படத்தில் வில்லன் தற்கொலை செய்துகொள்ளும் சமயத்தில் வரும் இந்த பாடல் திரையில் அனைவரையும் மெழுகாய் உருகவைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news