Inandoutcinema - Tamil cinema news

யப்பா! அது நாய்க்கறி இல்லையாம்; ஆட்டுக்கறிதானாம் – ஆய்வில் உறுதி

சென்னை: கடந்த வாரம் ஜெய்பூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் ஆட்டுக்கறிகள் தான் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் இருந்து திருவாருக்கு சுமார் 2000 கிலோ இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த போது அதில் இருந்த இறைச்சி பார்சல்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அவை அழுகிய நிலையில் வித்யாசமான உருவத்தில் இருந்தததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறைச்சிகள் சோதனை செய்து இவை நாய் கறியாக இருக்கலாம் என்றும் சென்னையில் உள்ள ஹோட்டல் சப்ளை செய்ய கொண்டுவந்திருக்கமால் என்றும் கூறப்பட்டது. இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் உடனடியாக பறவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரியாணிக்கடைகளிலும், இறைச்சி கடைகளிலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இது நாய்க்கறி அல்ல ஆட்டு இறைச்சி தான் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, பாறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் நாய்க்கறி அல்ல அவை ஆட்டு இறைச்சி தான் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மெட்ரா கால்நடை மருத்துவக்கல்லூரி ஆய்வி தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில் இறைச்சி வந்த பார்சல் குறித்து ரயில்வே காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news