Inandoutcinema - Tamil cinema news

சுசீந்திரனின் ‘சம்பியன்’’ படம் சூட்டிங் தொடங்கியது…

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புட் பால்’ விளையாட்டுபற்றி பின்னணி கொண்ட படத்தை இயக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. கூடவே படத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முதல் நாள் படபிடிப்பை நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி தொடங்கி வைத்தார், அவருடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடன் இருந்தார். இதனை இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு சாப்பியன் என்று தலைப்பிட்டுள்ளது. களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்ப்பில் கே.பார்கவி இந்த படத்தை தயாரிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில், ‘இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடி குழு’, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம்.

இத்திரைப்படத்தில் ரொஷன் என்ற முதுமுக ஹிரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், கி.கே.ரெட்டி, ஜெய்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹிரோயினாக அறிமுகமாகிறார். இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்று அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news