September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

கேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா

சூர்யாவின் அண்ணா நூற்றாண்டு நூலக புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, தற்போதைய கல்வி முறை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என தனது கருத்தை கூறினார். இந்நிலையில் நடிகர் சூர்யா கேரளா முதல்வரான பிரனாயி விஜயனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த 6-ந் தேதி நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின் பேரில் மாநில அரசு உதவிகள் செய்து கொடுத்தது. நீட் தேர்வு நடக்கும் பகுதிகளுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்து கொடுத்தனர். ரெயில், பஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த தன்னார்வ தொண்டு அமைப்பினரையும் நிறுத்தி இருந்தனர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் கேரள அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த மலையாள நட்சத்திர கலை விழாவில் கலந்து கொண்ட சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவிகள் செய்து கொடுத்ததை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்த முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், கேரள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்த செய்தியை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news