சூர்யா ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் சர்க்கார் அஜித்தின் விசுவாசம் படமும் ரிலீஸாகிறது. இதனால் இந்த மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் லண்டனில் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், சயீஷா சைகள், போமன் இரானி ஆகியோர் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னிலையில் சூர்யாவின் பிறந்த நாளான ஜுலை 15யை கொண்டாடுவதற்கான வேலைகளில் அவரது ரசிகர்கள் இப்போதே இறங்கிவிட்டனர். அவரது பிறந்தநாளன்று இந்த படத்தை பற்றிய விவரங்கள் ஏதெனும் அதிகாரபூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news