September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

அடுத்தடுத்த அறிவிப்புகளில் இணையத்தில் வைரலான நடிகர் சூர்யா. விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் சர்க்கார் அஜித்தின் விசுவாசம் படமும் ரிலீஸாகிறது. இதனால் இந்த மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் லண்டனில் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், சயீஷா சைகள், போமன் இரானி ஆகியோர் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலானது. அதை தொடர்ந்து மீண்டும் ஒரு செய்தி வைரலானது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் சூர்யா நடிப்பில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்பாடலை யு ட்யூப்பில் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளான இன்று சூர்யா இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். மேலும் சொடக்கு மேல பாடலும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news