நடிகர் சூர்யாவுடன் இணையும் உறியடி படத்தின் இயக்குனர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

உறியடி படத்தின் மூலம் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக உருவெடுத்தவர்தான் விஜய் குமார் ஆகும். எந்தவிதமான எதிர்பாப்பும் இல்லாமல் வெளியானதாலும், பணப்பிரச்சனை காரணமாக படத்தை குறைந்த அளவில் விளம்பரப்படுத்தியதாலும், உறியடி திரைப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற தவறியது.

இருப்பினும் இணையதளங்களில் திருட்டுதனமாக வெளியான பின்பு மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னரே விஜய குமார் திரை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார்.

தற்போது அவர் தனது இரண்டாவது படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார். விஜய் குமார் உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இதை நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் ஏதும் படக்குழு அறிவிக்கவில்லை விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news