Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

NGK படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தான் விஜயின் சர்க்கார் அஜித்தின் விசுவாசம் படமும் ரிலீஸாகிறது. இதனால் இந்த மூன்று படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. NGK படத்திற்கு பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் லண்டனில் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், சயீஷா சைகள், போமன் இரானி ஆகியோர் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலானது.

அதை தொடர்ந்து மீண்டும் ஒரு செய்தி வைரலானது. இந்த படத்தின் பூஜை நேற்று லண்டனில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிட்டத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news