Inandoutcinema - Tamil cinema news

இதை அறிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும் – எஸ்ஜே சூர்யா

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம்கொண்ட எஸ்.ஜே.சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தமிழ்வாணன் ஆகும். தொடர்ந்து மச்சக்காரன், நந்தி ஆகிய படங்களை இயக்கினார். அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை இணைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு உயர்ந்த மனிதன் என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது :

எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார்.

நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தான். இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார்.

ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதை கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன். அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார் என எஸ்.ஜெ.சூர்யா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news