September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

அமெரிக்கா செல்லவிருக்கும் நடிகர் ரஜினி. ஏன் தெரியுமா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா.

ரஜினி நடித்த காலா படம் வருகிற ஜூன் 7ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பின்னர் ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார். அதை தொடர்ந்து ஒரு ருசிகர தகவல் வெளிவந்தது. ரஜினி, கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திக்கு நம்ம அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news