Inandoutcinema - Tamil cinema news

பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விவரம் உள்ளே

தமிழ் தொகுப்பாளர்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் தக்கவைத்து கொண்டவர், தொகுப்பாளர் அஞ்சனா ஆகும். டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார்.

கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு டி.வி-க்கு பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார். சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நார்மல் டெலிவரி என்பதால், தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார்.

ஆண் குழந்தை பெற்றெடுத்த அஞ்சனாவிற்கு அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news