September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல இயக்குனரின் படத்தில் பாகிஸ்தானியாக நடிக்கும் நடிகர் சிம்பு ? விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணி அளவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இன்னிலையில் சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய ஒரு ருசிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா, டிரிப்பிள் ஏ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : டிரிப்பிள் ஏ’ படத்துக்கு அப்புறம் சிம்புவை வெச்சு இன்னொரு படம் பண்றதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு.

ஆனால், அந்தப் படம் `டிரிப்பிள் ஏ’வோட ரெண்டாவது பாகமா இருக்காது. ஏன்னா, அது நெகட்டிவ்வா மக்கள் மனசுல இருக்கு. `டிரிப்பிள் ஏ’ டைம்லேயே சிம்புவுக்கு ஒரு கதை சொன்னேன். சிம்புவை பாகிஸ்தானியா வெச்சு ஒரு ஸ்பை ஆக்‌ஷன் படம் ப்ளான் பண்ணுனோம். அடுத்து சிம்புவை வெச்சு படம் பண்ணுனா இந்தக் கதையைப் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு என கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news