சினிமா விளையாட்டா போச்சா ?

தமிழ் சினிமாவில் சிலருக்கு திரைப்படம் எடுப்பது விளையாட்டாக போய் விட்டது. பலர் விளையாட்டையே மையமாக வைத்து திரைப்படம் எடுகின்றனர். எந்தவிதமான விளையாட்டு சம்மந்தமான திரைப்படமாக  இருந்தாலும் மக்கள் அதை ரசித்து பார்கின்றனர்.

பொதுவாக மக்களுக்கு விளையாட்டின் மீது அதித ஆர்வம் உடையவர்கள். சிறு வயதில் நாம் அணைவரும் எதாவது விளையாடி இருப்போம் அதில் வெற்றி அடைய முயற்சித்து இருப்போம். நாம் சிறு வயதில் விளையாடியது கூட ஓர் அளவுக்கு நம்பகத் தன்மையுடன் விளையாடி மகிழ்த்து இருப்போம், ஆனால் இந்த சினிமாவில் மட்டும்தான் கதாநாயகர்கள் சிலர் சிறுது அளவும் நம்பக தன்மை இல்லாமல் வெற்றி கோப்பையை தட்டி செல்வார்கள்.

நாம் கடந்த வருடங்களில் லீ, சென்னை 600028, வெண்ணிலா கபடிகுழு, ஜீவா, இறுதிசுற்று, ஈட்டி, கனா மேலும் சில  இந்த மாதிரி திரைப்படங்களை ஒரு தரமான விளையாட்டு படம் என்று சொல்லலாம்.

ஒரு தனிநபர் அல்லது ஒருஅணி தங்கள் வாழ்கையில் அந்த விளையாட்டை சிறு வயது முதல் ஒரு கனவு போல் சுமந்து வருவார் அதில் உள்ள அரசியல், வியாபாரம், ஜாதி பாகுபாடு, மகிழ்ச்சி, தோல்வியில் வலி, பலவிதமான இழப்புகள் என அனைத்தை பற்றியும் இந்த படங்கள் சுமந்து செல்லும், இந்த காரணங்களினால் தான் இந்த படங்கள் நான் மனதில் நீங்கா இடம் பெற்றது.

மேலே கூறிய திரைப்படங்களுக்கு நேர் எதிராக விளையாட்டை வைத்து விளையாட்டாக  எடுக்கப்பட்ட படங்களும் இங்குதான் வந்துள்ளது. மான்கராத்தே, எதிர்நீச்சல், வலியவன், பட்டா பட்டி, பத்ரி, மேலும் சில படங்கள், இந்த படங்களில் கதாநாயகரோ, குழுவோ விளையாட்டை ஏதோ சாதரணமாக நினைத்து CHAMPION பட்டம் வென்றவர்கள்.

எதிர் காலத்திலாவது ஆக்கி, சதுரங்க ஆட்டம், ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல் இதுபோன்ற விளையாட்டுகளை மேம்படுத்தும் திரைப்படங்கள் வந்தால் சந்தோசம். அல்லது மீண்டும் கிரிகெட் சம்மந்தமான படத்தை எடுத்து பாகிஸ்தான் நாம் எதிரி, கிரிக்கெட்டால் நாட்டின் ஏழை மக்கள் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது  என்று சொல்லி ஏமாற்றி திரிகின்றனரா என்று பொறுத்திருந்து பாப்போம்.    

Article By : Prabu Charles

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news