September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் ஒத்திவைப்பு – தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் நிர்வாகிகள் தேர்தல் 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் முதலாவதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவுக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆண்டு வர்வு செலவு கணக்கு தாக்க செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர்,  நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். பலர், நடிகர் சங்கத்திற்கு தேர்தல் இப்போது வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
அதேபோன்று, உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். கட்டம் கட்டும் வேலைகள் பாதியில் உள்ளது எனவே
தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
அடுத்த ஆண்டு  மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்கள்.
பொதுக்குழுவில் நடிகர்கள் விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேசவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news